“அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் கட்டாயமல்ல!” - உச்ச நீதிமன்றம் அதிரடி!

 
மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!! மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

புதுடெல்லி: அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைப்பாடுவது ஒரு 'அறிவுறுத்தல்' மட்டுமே தவிர, அது 'கட்டாயம்' அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்றும், அந்த நேரத்தில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழிகாட்டுதலை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு பின்வரும் முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை ஒரு நெறிமுறை சார்ந்த அறிவுறுத்தல் மட்டுமே. இது ஒரு சட்டப்பூர்வமான கட்டாயம் கிடையாது. இந்தப் பாடலைப் பாடாதவர்களுக்கோ அல்லது இதைப் பின்பற்றத் தவறுபவர்களுக்கோ எவ்விதமான சட்டப்பூர்வத் தண்டனையும் விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், இப்பாடல் பாடப்படும் போது அதற்குரிய மரியாதையை அனைவரும் அளிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

1875ம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தேசபக்தி உணர்வைத் தூண்டும் முக்கியப் பாடலாகத் திகழ்ந்தது. தற்போது இதனைத் தேசியப் பாடலாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தெளிவுபடுத்தல், ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவது குறித்த நீண்ட கால விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.