தமிழகமே பதறிய விஏஓ கொலை சம்பவம்... மகன் நீதிபதியாக தேர்வு!

 
வி.ஏ.ஓ விஏஓ மார்ஷல்

தமிழகமே பதறியது அந்த சம்பவம் கேள்விப்பட்டு. நேர்மையான அரசு அதிகாரியாக மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வந்தார் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர். அந்த பகுதியில் நடைப்பெற்ற மணல் கடத்தலைத் தடுத்தார். மணல் மாஃபியாக்கள் அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர்களின் உதவியுடன் மல்லுக்கட்டி பார்த்தும், லஞ்சம் கொடுக்க முயன்றும், எதற்கும் அடிபணியாமல் மணல் கடத்தலைத் தடுத்தார். அதன் பின்னர், கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகாரளித்தார் லூர்து. அரசு உயரதிகாரிகளிடமும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்கள் குறித்து புகாரளித்தார். காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கையில்லை. உயரதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக சொன்னது போலவே மணல் கடத்தலைத் தடுத்ததால், மணல் கடத்தல் கும்பலால் கடந்த 25.04.2023 அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார் லூர்து பிரான்சிஸ் சேவியர். இக்கொலை குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை உடனடியாக கைதுசெய்யப்பட்டு, 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கொலை நடந்த 143வது நாளான 15.09.2023 அன்று மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற மதிப்பிற்குரி கனம் நீதிபதி  எம். செல்வம்  தீர்ப்பு வழங்கினார். மேற்படி இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.தாயாரை அரவணைத்து தேற்றிய மகனின் புகைப்படம் அப்போது வைரலானது. 

இந்நிலையில், சிவில் நீதிமன்ற நீதிபதியாக லூர்து பிரான்சிஸ் சேவியரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

வி.ஏ.ஓ. நீதிபதி தூத்துக்குடி மார்ஷல்

இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வு அறிவித்தது, இதில் விண்ணப்பித்த லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன்  மார்ஷல் ஏசுவடியான், தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் மேற்படி தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

வி.ஏ.ஓ. நீதிபதி தூத்துக்குடி மார்ஷல்

வெற்றி பெற்ற  மார்ஷல் ஏசுவடியான்-ஐ புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கே மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, அவரது பணி சிறக்கவும், மென்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர்  வாக்கரே அக்ஷய் அனில் மற்றும தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ராஜசுந்தர் ஆகியோரும் வாழ்த்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்!

From around the web