500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.. அதிரடி தண்டனை கொடுத்த நீதிமன்றம்..!

 
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய  கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியில் 2011ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணிப்புரிந்தவர் சந்தரையா. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இதனையடுத்து அக்டோபர் 11ஆம் தேதி  (நேற்று) தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைப்பெற்றது.

இதில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சந்தரையாவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20000 அபராதம் விதித்து நீதிபதி செல்வகுமார் தீர்ப்பு வழங்கினார்.