வரலட்சுமி விரதம் - நடிகை சினேகா வீட்டில் கோலாகலக் கொண்டாட்டம்!
Aug 21, 2026, 18:25 IST
பிரபல தென்னிந்திய நடிகை சினேகா தனது வீட்டில் வரலட்சுமி விரத பூஜையை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடிகை சினேகா பாரம்பரியமிக்க பட்டுப்புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார். வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில், அம்மன் அலங்காரத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
சினேகாவின் வீட்டு வரலட்சுமி பூஜையில் நடிகைகள் பிரீத்தா ஹரி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி ரசிகர்களின் லைக்ஸ்களையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றன.
