ஆசிய போட்டியிலிருந்து வருண் சக்கரவர்த்தி விலகல்; விப்ராஜ் நிகாம் சேர்ப்பு!

 
கிரிக்கெட் வருண் சக்கரவர்த்தி சுழற் பந்துவீச்சாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியின் போது பந்துவீசியபோது வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், அவர் இந்தத் தொடரிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் விப்ராஜ் நிகாம் இந்திய ஆசிய விளையாட்டு அணியில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.