நாளை திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்... குவியும் பக்தர்கள்!

நாளை ஜனவரி 19ம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் இன்று முதலே திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
இது குறித்து கோயில் இணை ஆணையர் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை தை உத்திர நட்சத்திர நாளில் நடைபெற்றது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இரவில் சுவாமி குமர விடங்கப் பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். புஷ்பாஞ்சலிக்காக அழகும், மணமுமுள்ள மலர்களை (கேந்திப்பூக்களைத் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் பக்தர்கள் வழங்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!