வயநாடு நிலச்சரிவு : 416 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஜூலை 30ம் தேதி அடுத்தடுத்து நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவினால் 416 பேர் உயிரிழந்தாகவும், 300க்கும் அதிகமானோர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து பூஜைகள் செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்ற ஐதீகம் உள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் பூஜை செய்யும் புரோகிதர்கள் சார்பில் கோரசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி புஷ்பாஞ்சலி பூஜை செய்து கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிலச்சரிவினால் வீடு, தங்களுடைய குடும்பத்தினரை பிரிந்து வாழும் வயநாடு மக்கள் மீண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணங்கள் வழங்கி, உதவ வேண்டும் என பிரார்த்தனை செய்வதாய் புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
