விசிக வேட்பாளர் பட்டியல் வெளியானது... ஆளூர் ஷாநவாஸுக்கு வாய்ப்பு மறுப்பு - திருமாவளவன் போட்டி!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வேட்பாளர் பட்டியலைத் தொல். திருமாவளவன் இன்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
விசிக தலைவர் திருமாவளவன், இந்தத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசிக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்:
| தொகுதி |
வேட்பாளர் |
| காட்டுமன்னார்கோவில் (தனி) |
தொல். திருமாவளவன் |
| செய்யூர் (தனி) |
சிந்தனைச் செல்வன் |
| திண்டிவனம் (தனி) |
வன்னி அரசு |
| திருப்போரூர் |
பன்னீர் தாஸ் |
| பண்ருட்டி |
அப்துல் ரகுமான் |
| அரக்கோணம் (தனி) |
எழில் கரோலின் |
| கள்ளக்குறிச்சி (தனி) |
மாலதி |
| பெரியகுளம் (தனி) |
ஆற்றல் அரசு |
கடந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நட்சத்திரப் பேச்சாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான் நிறுத்தப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மற்றும் அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் 8 தொகுதிகளையும் தனிச் சின்னத்தில் (பானை சின்னம்) சந்திக்க விசிக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சிந்தனைச் செல்வன் மற்றும் வன்னி அரசு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
