அமைச்சர் வன்னி அரசு பேனர் கிழிப்பு - விழுப்புரம் அருகே விசிகவினர் திடீர் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த குருமாம்பேட்டை பகுதிக்கு வருகை தர இருந்த விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசுவை வரவேற்று, விசிக சார்பில் சாலையோரம் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களில் ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நள்ளிரவில் கிழித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

பேனர் கிழிக்கப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், குற்றவாளிகளைக் உடனடியாகக் கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட விசிகவினருடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேனரைக் கிழித்த மர்ம நபர்களைக் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
