விசிகவைச் சேர்ந்த50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைப்பு!

 
dmk

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனர். விசிகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஷானு ஹனீஃப் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (செப். 05) மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது.

dmk

இந்த நிகழ்வில் விசிகவின் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். புதிதாகத் கட்சியில் இணைந்த அனைவரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கட்சித் துண்டு அணிவித்து அன்போடு வரவேற்றார்.

dmk

கட்சியில் இணைந்தவர்களின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது திமுகவின் முக்கியப் பல நிர்வாகிகளும் உடனிருந்து புதியவர்களை வாழ்த்தி வரவேற்பைத் தெரிவித்தனர்.