வேதாந்தா மின் உற்பத்தி நிலைய விபத்து... அனில் அகர்வால் மீது வழக்குப்பதிவு!

 
வேதாந்தா வேதாந்தா

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நிகழ்ந்த கோர விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் ஆலை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கவனக்குறைவாகச் செயல்படுதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேதாந்தா அகர்வால்

சிங்கிதராய் கிராமத்தில் உள்ள இந்த ஆலையில், பாய்லரில் இருந்து டர்பைனுக்குச் செல்லும் உயர் அழுத்த நீராவி குழாய் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாய்லருக்குள் அளவுக்கு அதிகமான எரிபொருள்  தேங்கியதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் கவனக்குறைவான செயல்பாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேதாந்தா

இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 35 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாயும் வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் மாநில அரசும் நிதி உதவியை அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் முன்னணித் தொழிலதிபர் மீது கவனக்குறைவு மரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொழில்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.