இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!

 
கரூர்

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சதீஷ்குமார் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு விரைவு பேருந்து எந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது, விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.