வீரப்பன் மகள் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல்!

 
வித்யாதரணி

 தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மார்ச் 20 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரியில்நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி   இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்  சேலம் மாவட்டம் மேட்டூர்  மூலக்காடு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீரப்பனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

வித்யாதரணி

அங்கு வெற்றி பெற உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.  இதன் பிறகு  கிருஷ்ணகிரி பழையபேட்டை, 5 ரோடு ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில்   கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வித்யாராணி வீரப்பன் “பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த போதும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணப்பட தொடரில் என் தந்தை மக்களின் நலனுக்காக பேசிய வீடியோக்களை பார்த்தேன்.
என் தந்தை எல்லை தெய்வமாக இருந்து இப்பகுதி மக்களுக்காவும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வந்தார். அதே கொள்கைகளின் அடிப்படையில் இன்று  நாம் தமிழர் கட்சியும் போராடி வருகிறது. அந்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன். கட்சியில் சேரும்போதே ‘நீ தான் வேட்பாளர்’ என சீமான் தெரிவித்தார்.  

வித்யாதரணி


நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வீரப்பனின் மகளாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மக்களை சந்திப்பேன். படேதலாவ் திட்டம், அஞ்செட்டியில் அணை நீர் திட்டங்கள் விரைந்து அமைக்க பாடுபடுவேன்.இளைஞர்கள் சிறு குறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். எங்களின் திட்டம் குறித்து மட்டுமே எனது பிரச்சாரம். மற்ற கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் ” என்றார் வித்யாராணி.34 வயதான வித்யாராணி  பி.ஏ.பி.எல் படித்துள்ளார். தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வரும் வித்யாதரணி  கிருஷ்ணகிரியில் மழலையர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web