காய்கறி வரத்து 50% சரிவு... தக்காளி, பீன்ஸ் விலை அதிரடி உயர்வு!

 
இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!! இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

தமிழகத்தில் நிலவும் கத்திரி வெயிலுக்கு முன்னதான கடும் வெப்பம், விளைச்சலைப் பாதித்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் கோயம்பேடு சந்தைக்கு, நாளொன்றுக்கு வழக்கமாக 8,000 முதல் 10,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

தற்போதைய கடும் கோடை வெயில் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளும் கிலோவிற்கு ₹5 முதல் ₹10 வரை உயர்ந்துள்ளன. குறிப்பாகப் பீன்ஸ் விலை சில்லறை விற்பனையில் செஞ்சுரி அடித்துள்ளது.

இன்றைய காய்கறி விலை நிலவரம் தக்காளி ஒரு கிலோ ₹40, பீன்ஸ் ஒரு கிலோ ₹90 - ₹120, கேரட் ஒரு கிலோ ₹40, வெண்டைக்காய் ஒரு கிலோ ₹40 - ₹50, முருங்கைக்காய் ஒரு கிலோ ₹40 - ₹50, பீர்க்கங்காய் ஒரு கிலோ ₹50, புடலங்காய் ஒரு கிலோ ₹40, உருளைக்கிழங்கு ஒரு கிலோ ₹20 - ₹30, பீட்ரூட் ஒரு கிலோ ₹30 - ₹40, 

கோயம்பேடு காய்கறி சந்தை

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்பதால், காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணிக்கின்றனர். குறிப்பாகத் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து சீராகவில்லை என்றால், சமையலறை பட்ஜெட் மேலும் எகிறும் என இல்லத்தரசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.