இனி ஆண்டு முழுவதும் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் - ஆயர் அறிவிப்பு!
Oct 2, 2026, 16:25 IST
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் இனி ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி (நாளை) முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்திருக்கும்.

உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஆன்மீகப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இத்தலத்தில், பக்தர்கள் எந்த நேரத்திலும் வந்து தங்களது பிரார்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்தச் சிறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
