இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் ஓபன் ஸ்குவாஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்!

 
ஸ்குவாஷ் இந்திய வீரர் செந்தில்குமார்

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில், உலக தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், சக நாட்டவரான வீர் சோத்ரானியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வேலவன் செந்தில்குமார் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் போராடி த்ரில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

கோப்பையை வெப்புவதற்கான இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வீரர் பாலாஸ் பர்காசை எதிர்கொள்ள உள்ளார்.