வேல் புறப்பாடு.. விஜயதசமியன்று பழனியில் காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

 
பழனி திண்டுக்கல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி விஜயதசமி அன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி திண்டுக்கல்

அன்று நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 01.30 மணிக்குச் சாயரட்சை பூஜையும் நடைபெறவுள்ளது. பிற்பகல் 02.45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்பு போட்டுத் திரும்பிய பின் இராக்கால பூஜை நடைபெறும்.

பழனி முருகன்

இக்கோயில் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு, மலைக்கோயிலில் அனைத்துக் கட்டணச் சீட்டுகள் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும். எனவே, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் **காலை 11.00 மணி வரை மட்டுமே** மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.