வெயிலை தணிக்க வெந்தயக் களி .... இப்படி செய்து பாருங்க.. விடவே மாட்டீங்க!

 
வெந்தயக் களி
 

வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இதனை தணிக்க என்ன தான் தண்ணீர் , இளநீர், மில்க்‌ஷேக், குளிர்பானங்கள் கொடுத்தாலும் குடிக்கும் வரை தான் . அதன் பிறகு உடலுக்கு வெக்கை வாட்டி தள்ளுகிறது. இதனை தவிர்க்கவும், கோடை காலத்திலும் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் அருமையான பாட்டி கால உணவு வகை உண்டு. இதனை வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டாலே போதும். தமிழகத்தின்  பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று வெந்தயக் களி. இந்த களியில்  கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலுவையும் கொடுக்கிறது .

வெந்தயக் களி செய்யத் தேவையான பொருட்கள்:

வெந்தயக் களி
 
வெந்தயம் - 1/4 கப்
கருப்பு உளுந்து - 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
வெல்லம்- 1/2 கப்

செய்முறை: 

வெந்தயக் களி
பச்சரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு இவைகளை தண்ணீர் விட்டு அலசி  சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி விட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். மறுபக்கம் வெல்லத்தை காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  

அரைத்த மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல்  கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கனத்த பாத்திரத்தில் மாவை விட்டு நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதனுடன் வெல்லப்பாகுவை ஊற்றிக் கிளறி விட வேண்டும். கடைசியில் நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.  அவ்வளவு தான் வெந்தயக்களி தயார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web