பரபரப்பு ... வேங்கை வயல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

 
வேங்கை வயல்
 

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம்  வேங்கை வயல் சம்பவம். இது குறித்த வழக்கு தற்போது வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கை வயலில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்து 2 வருடங்கள் தாண்டியும் அதில் உண்மை குற்றவாளிகளை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

வேங்கைவயல்


இதைத்தொடர்ந்து குற்றப் பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட முரளி ராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.  புதுக்கோட்டை நீதிமன்றம் தற்போது வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேங்கைவயல்

அத்துடன்  இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என அவர்கள் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களையே குற்றவாளிகளாக காவல்துறையினர் சித்தரித்து இருப்பதாக பல  அரசியல் கட்சி தலைவர்கள் கடும்  கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில் ஆடியோ கூட வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில்  தற்போது வழக்கு வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web