ஈரான் போர் சூழலால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு... அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!
ஈரான் போர் சூழல் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கமளித்துள்ளார் . சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களால் பொருட்களின் போக்குவரத்துச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவான பதில்களை அளித்தார்
பொருட்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தடங்கல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது . மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகளில் விலைச் நிலவரம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார் .
இந்த விலை உயர்வைச் சீர்செய்து நிலைமையை விரைவில் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் . பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசின் சார்பில் தேவையான அனைத்துப் பாதுகா நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
