விசிக நிர்வாகி கொலை வழக்கில் வீனஸ் உட்பட 7 பேர் கைது!
Aug 29, 2026, 10:30 IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான அன்பழகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், வீனஸ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே விசிக நிர்வாகி அன்பழகன் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், முக்கியக் குற்றவாளியான வீனஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தத் திடுக்கிடும் படுகொலை வழக்கில் மேலும் தொடர்புடைய எஞ்சிய நபர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
