சஞ்சரிக்கும் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!
இன்றைய ஏப்ரல் 20, 2026 (திங்கட்கிழமை) இன்று அட்சய திருதியை . தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் இன்று கல் உப்பு, மஞ்சள் அல்லது பருப்பு வகைகளை வாங்கி வீட்டில் வைப்பது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்.
மேஷம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வங்கி கடன் உதவி இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே சஞ்சரிப்பதால், பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று அட்சய திருதியை என்பதால் நீங்கள் செய்யும் முதலீடுகள் பன்மடங்கு பெருகும். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும்.
மிதுனம்
தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழில் நிமித்தமாகச் சில செலவுகள் ஏற்படலாம், ஆனால் அவை எதிர்காலத்தில் லாபத்தைத் தரும்.

கடகம்
பணப்புழக்கம் இன்று திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் தொடங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
சிம்மம்
தொழிலில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் சிறு அக்கறை தேவை. அரசு வழியில் சில நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கன்னி
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் அமையும்.
துலாம் (சந்திராஷ்டமம்)
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு இன்று ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.

தனுசு
வழக்கு விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் குறையத் தொடங்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் இன்று முடியும்.
மகரம்
பிள்ளைகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். ஆன்மீகப் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள்.
கும்பம்
அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வீட்டைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நிலம் மற்றும் வீடு வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
மீனம்
தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும். பக்கத்து வீட்டாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
