மூத்த திரைப்படப் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி காலமானார்!

 
pro

 

தமிழ்த் திரையுலகின் மூத்த திரைப்படப் பத்திரிகையாளரும், ‘பொம்மை’ இதழின் ஆசிரியருமான பொம்மை சாரதி (93) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Journalist Bommai Sarathi Passes Away

சுமார் 85 ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்படத் துறையுடன் தொடர்பில் இருந்து பணியாற்றியவர் பொம்மை சாரதி. தனது பத்திரிகைப் பயணத்தை ‘பேசும்படம்’ இதழில் துணை ஆசிரியராகத் தொடங்கினார்.

பின்னர், டால்டன் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியான ‘பொம்மை’ மற்றும் ‘மங்கை’ இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல தலைமுறைத் திரைப்படக் கலைஞர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததுடன், தமிழ்த் திரையுலக வரலாற்றையும் தனது எழுத்துகள் மூலம் பதிவு செய்துள்ளார்.

முதுமை காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (நவம்பர் 18) அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லட்சுமி, லாவண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.பொம்மை சாரதியின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்