கால்நடை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

 
கால்நடை மருத்துவ படிப்பு

 
கால்நடை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் 2023-24 ம் ஆண்டிற்ஆன இளநிலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.  16.08.2023- காலை 9.00 மணிக்கு பிவிஎஸ்சி&ஏஎச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்) மற்றும் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்)    சிறப்பு பிரிவில்  கலந்தாய்வு நேரடியாக நடைபெறும் . இந்த கலந்தாய்வு  அண்ணா கலையரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007  என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

நாய்


அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு பெற 17.08.2023 காலை 9.00 மணிக்கு   நேரடியாக  அண்ணா கலையரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007 என்ற முகவரியில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9 மணிக்கு  பிடெக் (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) - முதல் சுற்று கலந்தாய்வு நேரடியாக   அண்ணா கலையரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007யில் நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவ கல்லூரி சென்னை

 
பொதுப்பிரிவுக்கான பிவிஎஸ்சி&ஏஎச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் - கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். இதற்கான தேதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  
கூடுதல் விவரங்களுக்கு..  விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக இணையதளத்தில் (www.adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!