நாளை காலை முதல்வர் தலைமையில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு'!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026" சென்னை கிண்டியில் நாளை ஆகஸ்ட் 13ம் தேதி காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. .
புதிய முதலீடுகளைத் திரட்டி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இம்மாநாடு குறித்துத் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில், "முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைக்க அன்புடன் அழைப்பு விடுத்தேன். தொழில்துறை தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையும். தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
