இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி.. பலத்த பாதுகாப்பு... பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

இன்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் சென்னை வரவுள்ளதையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர்.
இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா, இன்றிரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர் சாலை மார்க்கமாக மகாபலிபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் தனியார் மண்டபத்திற்கு செல்கிறார். திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி புறப்படவுள்ளார். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் இ ந்று மாலை 4.55 மணியளவில் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து முட்டுக்காட்டில் உள்ள காது கண் கேளாதோர் தேசிய நிறுவனத்தின் 3வது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து வெங்கையா நாயுடு பேரனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மீண்டும் இன்றிரவே சென்னை விமான நிலையம் வந்து டெல்லி புறப்படவுள்ளார். இதனால் சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து தாமதமடையாமல் இருக்கவும், சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை போக்குவரத்து போலீசார் மாற்றம் செய்துள்ளனர். அதில் சோழிங்கநல்லூரில் இருந்து அக்கரைக்கு வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
அதேபோல் மகாபலிபுரத்தில் இருந்து ஈசிஆர் வழியாக வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு கேளம்பாக்கம் வழியாக மாற்றி விடப்படும். திருப்போரூரில் இருந்து ஓஎம்ஆர் வரும் வாகனங்கள், கேளம்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும். விமான நிலையத்திற்கு செல்லவிருக்கும் வாகனங்கள், ஓஎம்ஆர் மற்றும் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை பயன்படுத்தி செல்லலாம்.
தாம்பரம் மாநகர எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கனரக வாகனங்களும் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் 200 அடி ரேடியல் சாலையில் மதியம் 2 மணி முதல் இரவு 11.30 மணி வரை நுழைவது கட்டுப்படுத்தப்படும். வாகன ஓட்டுகள் தங்கள்ம் இலக்கை அடைய ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்தி அவர்கள் செல்லும் இடங்களுக்கு செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!