மாணவிகள் விடுதிக்குள் திடீரென நுழைந்த துணைவேந்தர்.. பதவி விலகக் கோரி பெரும் போராட்டம்!

 
பஞ்சாப் போராட்டம்

அனுமதியின்றி மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த துணைவேந்தர் பதவி விலகக் கோரி பஞ்சாப் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. விடுதியும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெய்சங்கர் சிங் எந்தவித முன் அறிவிப்பும், அனுமதியும் இன்றி விடுதி வளாகத்திற்கு சென்றார். விடுதி விதிகளின்படி, விடுதியுடன் தொடர்புடைய மாணவர்கள் மட்டுமே விடுதி வளாகத்திற்குள் நுழைய முடியும். விடுதி வளாகத்திற்குள் பெற்றோர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அனுமதியின்றி விடுதிக்குள் நுழைந்த துணைவேந்தரை மாணவிகள் கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது குறித்து புகார் வந்ததால் துணைவேந்தர் விடுதிக்கு வந்ததாக தெரிவித்தனர். ஆனால் விடுதிக்குள் சோதனை நடத்த வேண்டும் என்றால், மாணவர்களுக்கோ அல்லது விடுதி காப்பாளருக்கோ முன்னறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மேலும், ஆய்வுக்கு வந்த அவருடன் பெண் ஆசிரியர்களோ, காவலர்களோ இல்லை. ஆய்வுக்கு வந்த துணைவேந்தர், விடுதியின் உள்ளே மாணவிகள் அறைக்கு சென்றதால், அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். குளித்துவிட்டு அறைக்கு திரும்பிய மாணவியிடம் துணைவேந்தர் விசாரித்தார்.

மாணவிக்கு சரியாக உடை அணிவதற்குக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக துணைவேந்தர் பதவி விலக வேண்டும். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். பிரச்னை தீவிரமடைந்ததால், நேற்று மாணவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. மேலும், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 9 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு தலையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web