விடா முயற்சி அனல் பறக்கும் விமர்சனம்!
தமிழ் திரையுலகின் தல கதாநாயகன் அஜித் 2 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் . ரசிகர்களின் உற்சாக கூச்சல், கும்மாளத்துடன் விடா முயற்சி மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. அஜீத் திரிஷா இருவருமே 3 வருடம் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரின் திருமண வாழ்க்கையில் த்ரிஷாவின் கர்ப்பம் ஒரு முறை கலைய இருவருக்குள்ளும் விரிசல் தொடங்கி விவாகரத்து வரை செல்கிறது.
அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க, அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என ட்ராப் செய்ய வருகிறார். அந்த இடத்தில் அஜீத் கார் ப்ரேக் டவுன் ஆக, அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவியுடன் திரிஷா ட்ரெக்கில் ஏறி காணாமல் போகிறார்.

அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார். போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் வருகிறது. அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா, ரெஜினா சொன்னது உண்மையா என்பதே மீதிக்கதை.
ஒரு நார்மல் மனிதனுக்கு இந்த மாதிரியான பிரச்சனை வந்தால் அவன் என்ன செய்வானோ அப்படி இதை உருவாக்கியதற்காக இயக்குனரை கொண்டாடலாம்.
அஜித்-திரிஷா இருவரின் ஜோடியும் திரையில் ஷார்மிங். அதிலும் இளமை தோற்றத்தில் அஜித்தும், திரிஷா தன் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி இருவரின் பயணம் ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல கதை சூடு பிடிக்கத் தொடங்குகிறது.
ஆரவ் கேங்கின் அட்டகாசம், அதை தொடர்ந்து அர்ஜுன், ரெஜினா வருகை, திரிஷா காணாமல் போவது என படத்தின் ஒரு பாதி பதட்டத்துடன் பொறுமையை சோதித்தவாறே நகர்கிறது.

அனிருத் தன் இசையால், மெதுவாக நகரும் காட்சிகளை கூட தன் பின்னணி இசையால் தாங்கி பிடித்துள்ளார், அதிலும் அஜித்தே என கத்துவது போல் அவர் போட்ட இசை, தியேட்டரே அதிர்கிறது, கிளைமேக்ஸ் பத்திகிச்சு சாங் ரசிகர்களுக்கு விருந்து.
அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்பை அத்தனை அழகாக காட்டியுள்ள ஓம் பிரகாசுக்கு பெரிய சல்யூட். மேலும் ஆரவ்-வுடன் காரில் நடக்கும் சண்டைக்காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் அப்ளாஸ் அள்ளுது. என்ன தான் படம் என்கேஜிங் ஆக போனாலும், பல இடங்களில் பொறுமையை சோதிக்கும் படி மெதுவாக நகரும் காட்சிகள் இருக்கிறது. முதல் பாதி.இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம் வீண் முயற்சியாக இருக்கிறதே என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு .
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
