பகீர் வீடியோ... போதையில் நடுரோட்டில் அட்ராசிட்டி... அரசு பேருந்தை வழிமறித்து பிறப்புறுப்பைக் காட்டி ஆபாசச் செய்கை!

 
போதை போதை

மதுரையில் பொதுமக்களையும், அரசுப் பேருந்து ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இரு இளைஞர்களைத் தெற்குவாசல் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில், ஆரப்பாளையத்திலிருந்து விரகனூர் சுற்றுச்சாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, திருமலை நாயக்கர் மஹால் அருகே சென்றுக் கொண்டிருந்த போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போதை இளைஞர்கள் நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், பேருந்தில் பெண்கள் மற்றும் பயணிகள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் தனது ஆடையைக் களைந்து பிறப்புறுப்பைக் காட்டி அநாகரிகமாகச் செயல்பட்டுள்ளார்.

பேருந்தில் இருந்த பயணி ஒருவர் இந்த அருவருக்கத்தக்கச் செயலைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. வீடியோவில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்துத் தெற்குவாசல் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், சுப்புராயர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த குமார் (24) மற்றும் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (25) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

வெறிநாய்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆபாசமாகப் பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றும் வீடியோவில் காணப்படும் மற்றொரு இளைஞரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மதுரையில் அண்மைக்காலமாகப் போதை இளைஞர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகப் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.