பகீர் வீடியோ... மருமகளின் அந்தரங்க இடத்தில் கொடூரமாக தாக்கி, வீதியில் இழுத்து போட்ட மாமனார்... வரதட்சணைக்காக அரங்கேறிய கொடூரம்!

 
வரதட்சணை வரதட்சணை

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், முதியவர் ஒருவர் தனது மருமகளை வீதிக்கு இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கும், அவருக்கும் இடையே சில காலமாகவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகனுக்கு வேறொரு பெண்ணுடன் மறுமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட அந்த மாமனார், அதற்குத் தடையாக இருந்த மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த முதியவர் தனது மருமகளைத் தலைமுடியைப் பிடித்து வீதிக்கு இழுத்து வருவதும், கீழே தள்ளித் தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாகவே, தன்னை மாமனார் வீட்டார் ஒரு அறைக்குள் பூட்டி வைத்துத் துன்புறுத்துவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்தப் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கோரியிருந்தார்.

மாம்

இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, கான்பூர் போலீசார் உடனடியாகத் தலையிட்டு வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்டமாகப் பெண்ணைத் தாக்கிய மாமனாரைக் கைது செய்துள்ள போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் ரூ.20 லட்சம் வரதட்சணைக் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது.