பகீர் வீடியோ.. ஹெல்மெட் திருடும் இளம்பெண்... காதலனுடன் ஊர் சுற்ற கோவையில் அதிகரிக்கும் ஹெல்மெட் திருட்டு!

 
ஹெல்மெட்

இதென்னடா புது கதையா இருக்கு? என்று வாய் பிளக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களைப் பார்ப்பவர்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவையில் இப்படி 10 இடங்களில் ஹெல்மெட் திருட்டு தொடர்கதையாகி இருக்கிறது. கோவையில் பைக்கின் பின்னால் அமர்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், போலீசாரின் கெடுபிடியில் இருந்து தப்பிக்கவும், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காகவும் காதலனின் பின்னால் ஹெல்மெட் அணிந்து, பைக்கில் அமர்ந்து ஊர்சுற்றும் காதலிகள், ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கின் மீதிருக்கும் ஹெல்மெட்டை திருடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மட்டை இளம்பெண் ஒருவர் நைசாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளம்பெண், வண்டி நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் அருகே இறங்கியுள்ளார்.

மிகவும் சாதாரணமாக நடந்து வந்து, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த ஹெல்மட்டை யாருக்கும் சந்தேக வராத வகையில் எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த நபரின் வாகனத்திலேயே ஏறித் தப்பியோடியுள்ளார்.

ஹெல்மெட்

இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.