வைரல் வீடியோ! பீட்சா குலோப் ஜாமூன் சாப்பிட தயாரா?

 
’பீட்சாவில் குலோப் ஜாமூன்’.. செய்முறை வீடியோ வைரல்!

சமீப காலமாக அயல்நாட்டு உணவுகள் மீது பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம், குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் இட்லி போன்ற வித்தியாசமான உணவுக் கலவைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 

View this post on Instagram

A post shared by Foodler (@realfoodler)

அந்த வகையில் Realfoodler என்ற சமூக வலைதளம் குலோப் ஜாமூனை பயன்படுத்தி பீட்சா தயாரிப்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு உணவு விற்பனையாளர் குலாப் ஜாமூன் பீட்சாவை தயாரிக்கும் போது, ​​பீட்சா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாவை எடுத்து அதன் மேல் சர்க்கரை பாகை ஊற்றுகிறார்.

’பீட்சாவில் குலோப் ஜாமூன்’.. செய்முறை வீடியோ வைரல்!

 

அதன் பிறகு குலோப் ஜாமூனை சிறிய துண்டுகளாக உடைத்து மாவின் மீது வைக்கிறார். பீட்சாவை அடுப்பில் வைப்பதற்கு முன், அவர் அதை சீஸ் கொண்டு நிரப்புகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, உணவுப் பிரியர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web