வைரலாகும் வீடியோ... போதையில் அரசுப் பேருந்தில் இளம்பெண் ரகளை!
சென்னையில் மதுபோதையில் அரசுப் பேருந்தில் ஏறி சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்த இளம்பெண்ணை, பயணிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்ட மாநகரச் சொகுசுப் பேருந்து ஒன்றில், 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் மதுபோதையில் ஏறினார். போதையின் உச்சத்தில் இருந்த அப்பெண், பேருந்தில் பயணம் செய்த சக பயணிகளிடம் காரணமின்றிச் சண்டையிட்டுள்ளார். மேலும், தட்டிக் கேட்ட பயணிகளை நோக்கி ஆபாசமான வார்த்தைகளைப் பேசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்பெண்ணின் தொடர்ச்சியான தொல்லையாலும் அடாவடித்தனத்தாலும் அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அவரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தின் போது அப்பெண் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
