வைரலாகும் வீடியோ - ஓடும் வண்டியிலிருந்து கொளுத்தும் வெயிலில் செய்தியாளர்களுக்கு 'கூல் டிரிங்க்ஸ்' கொடுத்த விஜய்!

 
விஜய் விஜய்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தட்டாஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது தொண்டர்களின் உற்சாகம் கரைபுரண்டது.

புதுச்சேரி வந்த விஜய்க்குத் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவருக்கு 'வேல்' ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதனைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்ட விஜய், வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உரையாற்றினார்.


பிரசார வாகனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர்களும், கேமராமேன்களும் விஜய்யின் பிரசாரத்தைப் படம்பிடித்தபடி வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தனர். வெயிலில் வாடிய செய்தியாளர்களின் நிலையைக் கவனித்த விஜய், தனது வாகனத்தில் இருந்த ஜூஸ் பாட்டில்களை எடுத்துச் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

"பரவாயில்லை சார்.. குடிங்க.." என்று அவர் அன்புடன் கொடுத்தது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. தற்செயலாக நடந்த இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துப் பகிர, அது தற்போது இணையத்தில் #Vijay #TVK #Puducherry போன்ற ஹேஷ்டேக்குகளுடன் டிரெண்டாகி வருகிறது.

விஜய்

புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பிரசாரம் தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் மற்றும் இளைஞர்களிடையே அவரது இத்தகைய எளிமையான அணுகுமுறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.