பகீர் வீடியோ... “வேறொருத்தனுடன் பைக்ல எப்படி போகலாம்?” நடுரோட்டில் மனைவியை வெளுத்து வாங்கிய கணவன்!

 
நடுரோட்டில்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தனது மனைவியை நடுரோட்டில் கணவர் ஒருவர் பெல்ட்டால் கண்மூடித்தனமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் நகரின் முக்கிய வீதியில், பெண் ஒருவர் மற்றொரு நபருடன் ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது கணவர் ஆத்திரமடைந்து, ஓடும் வாகனத்தை நடுரோட்டிலேயே வழிமறித்து, "நீ எப்படி வேறொரு நபருடன் பைக்கில் போகலாம்?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் பொதுமக்களின் கண் முன்னே தனது இடுப்பு பெல்ட்டைக் கழற்றி மனைவியை இரக்கமின்றிச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடியும், செல்போனில் வீடியோ எடுத்தபடியும் நின்றுள்ளனர்.

பின்னர், வீடியோ பதிவு செய்த நபர் நேரடியாகச் சென்று கணவனைத் தடுத்து நிறுத்தித் தாக்குதலைக் கட்டுப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்த இந்த வன்முறைக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.