பகீர் வீடியோ... ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்!

 
பாலியல் ரோட்டில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையில் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில், இரவு சுமார் 7 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சைக்கிளில் வந்த மர்ம இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறி நடந்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பொதுமக்களிடையே இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்தோ அல்லது அப்பகுதி மக்களிடம் இருந்தோ இதுவரை காவல் நிலையத்தில் புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.