பகீர் வீடியோ... அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மோதல்!

 
சேகர்பாபு சேகர்பாபு

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது.


வாக்குச்சாவடி ஒன்றில் ஆய்வு செய்யச் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது. ஒருவரையொருவர் ஒருமையில் பேசியதாகவும், ஒருகட்டத்தில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் திமுக மற்றும் தவெக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேகர்பாபு

துறைமுகம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான சேகர்பாபுவை எதிர்த்து, தனது முதல் தேர்தலைச் சந்திக்கும் தவெக-வின் சினோரா அசோக் களமிறங்கியுள்ளதால், இந்தத் தொகுதி ஆரம்பத்திலிருந்தே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இன்றைய மோதல் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், அமைச்சருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.