குவியும் கண்டனங்கள்: கொளுத்தும் வெயிலில் பள்ளி வளாகத்தில் கற்களை அள்ளிய மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!
Aug 28, 2026, 19:50 IST
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் கற்களை அள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சிதறிக்கிடந்த பெரிய கற்களை, மாணவ-மாணவிகள் கொளுத்தும் வெயிலில் கைகளால் அள்ளி அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளி மாணவ-மாணவிகளைக் கொண்டு இத்தகைய வேலைகளை வாங்கியுள்ள இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
