பகீர் வீடியோ... கிருஷ்ணகிரியில் பாமக வெறியாட்டம்... திமுக பேனர் கிழித்து போராட்டம்!

 
பாமக

கிருஷ்ணகிரியில் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக பிரமுகரின் மகன் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கடந்த வாரம் காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவின் போது, வீரப்பனின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வந்த இளைஞர்களை ஒரு கும்பல் பட்டாக் கத்தியால் தாக்கியது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக திமுக ஒன்றிய செயலாளர் மகேந்திரனின் மகன் ஆகாஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாமக

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாமக மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமையில் இன்று காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க இளைஞர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், பேருந்து நிலைய கட்டிடத்தின் மீது ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்களைக் கிழித்து எறிந்தனர். இதனால் திமுக மற்றும் பாமக தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனடியாக தலையிட்ட போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திச் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பேனர் கிழிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.