மீண்டும் திருமண விழாவில் ஜோடியாக வலம் வந்த விஜய் - த்ரிஷா!

 
த்ரிஷா ஜெகன்மோகன்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பச் சொந்தமான ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னணி நடிகை த்ரிஷா ஆகியோர் இணைந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், திரையுலகம் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முன்னணித் தொழிலதிபர் கெளதம் அதானி, தெலங்கானா பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட பலர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

த்ரிஷா

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டது அங்கிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. மணமக்களுக்கு வாழ்த்து: விழாவிற்கு வந்த முதலமைச்சர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் மேடைக்குச் சென்று புதுமணத் தம்பதியருக்கு மலர்க்கொத்து வழங்கித் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேடையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நலம் விசாரித்துச் சிறிது நேரம் உரையாடினர்.

த்ரிஷா

முதலமைச்சர் விஜய், நடிகை த்ரிஷா, தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானியுடன் ஒரே மேடையில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தீயாகப் பரவி வருகின்றன.