புதுச்சேரி 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி - வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் விஜய் !
புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரங்கசாமி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்வதாக முடிவெடுத்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்துக் களம் காணும் என விஜய் அறிவித்துள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வப் பட்டியலில், லாஸ்பேட்டை - V. சாமிநாதன், காரைக்கால் தெற்கு - K.A.U. அசனா, நெட்டப்பாக்கம் (தனி) - L. பெரியசாமி, திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார், முத்தியால்பேட்டை - J. பிரகாஷ் குமார், பாகூர் - N. தனவேலு, ராஜ் பவன் - V.J. சந்திரன், உப்பளம் - S. சிவா, உழவர்கரை - S. சசிபாலன், அரியாங்குப்பம் - S. குமரவேலு, மணவெளி - B. ராமு, வில்லியனூர் - R. ரமேஷ், முதலியார்பேட்டை - N. மணிபாலன், மண்ணாடிப்பட்டு - K. பாரதிதாசன், உருளையன்பேட்டை - S. மரிய பிரான்சிஸ், மங்கலம் - M.K. சத்யா, காமராஜ் நகர் - Dr. R. சுமன், நெல்லித்தோப்பு - S. விக்னேஷ்வரன், காலாப்பட்டு - D. சசிக்குமார், இந்திரா நகர் - S. முருகன், கதிர்காமம் - R. ஜெயந்தி, ஊசுடு (தனி) - S. சரகணபவா, தட்டாஞ்சாவடி - M. பன்னீர்செல்வம், ஏம்பலம் (தனி) - V. தமிழ்ச்செல்வன், நெடுங்காடு (தனி) - U. காமராஜ், திருநள்ளாறு - A. ராஜா முஹம்மது, காரைக்கால் வடக்கு - A. வெங்கடேஷ், நிரவி - T.R. பட்டினம் - G. கணேஷ், மாகே - M. பிரிஜேஷ், ஏனாம் - A. தோட்டா ராஜூ ஆகியோ பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விஜய் விடுத்துள்ள அறிக்கையில், விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
