தவெக செய்தித் தொடர்பு அணியில் புதிய பொறுப்புகள் - விஜய் அறிவிப்பு!

 
முதல்வர் விஜய்

தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு பிரிவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செய்தித் தொடர்பாளர்களாக வைகைச்செல்வன், மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர், அணிப் பொறுப்பாளராக ஆ. ராஜ்மோகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக எஸ். ரமேஷ், சு. ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நியமனங்கள் குறித்துச் செய்தி வெளியிட்ட தவெக தலைவர் விஜய், "புதிய பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். கழகத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.