விஜய் பிரச்சாரத்தில் பயங்கரம்... மூச்சுத்திணறி மயங்கி விழுந்த பெண்கள்!
சென்னை தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரசாரத்தை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பல பெண்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அடிப்படை வசதிகள் மற்றும் முறையான கூட்ட நெரிசல் மேலாண்மை இல்லாமல் இந்த பிரசாரம் நடத்தப்பட்டதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விஜய்யை காண கால் கடுக்க நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்!#Chennai #Villivakkam #Women #Fainting #Vijay #TVK #Gift #VijayCampaign #TVKVijayCampaign #Newstamil24x7 pic.twitter.com/AxJQVSODI0
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) April 20, 2026
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தவெகவினரின் நிர்வாகக் குளறுபடிகளை கடுமையாகச் சாடியுள்ளார். பெண்கள் வெயிலில் நசுங்கி நிற்கும் நிலையில், ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு திமுக அரசுதான் பொறுப்பா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 1 சதவீதம் கூட ஒழுங்கு இல்லாத இந்தக் கூட்டத்தை உலக நாட்டு ராணுவமே வந்தாலும் திருத்த முடியாது என அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் பிரசாரக் கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கட்சி மாநாட்டின் போதும் இது போன்ற புகார்கள் எழுந்த நிலையில், தற்போது சென்னையிலும் அதே நிலை தொடர்வது கட்சி மேலிடத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் இதுபோன்ற பிரசாரக் கூட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
