"தமிழகம் தனி நாடானால் மட்டுமே விஜய் பிரதமர் ஆக முடியும்" - டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

 
விஜய் இளங்கோவன்

சென்னை செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

மாநிலத்திலேயே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தும் ஒருவர் எவ்வாறு நாட்டின் பிரதமராக உயர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை தமிழ்நாட்டைத் தனி நாடாகப் பிரித்து, அந்தத் தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே விஜய் பிரதமராவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.