அதிர்ச்சி வீடியோ... சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே... ரோடு ஷோவால் நசுங்கிய தளபதி கார்!

 
விஜய்

இளையதளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில்  ‘ கோட்’  திரைப்படம்   வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.   கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கேரளா சென்ற  படக்குழுவுடன்   நடிகர் விஜய்யும் சென்றிருந்தார். விஜய்  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். கேரளா வந்திருந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தன.  


இதற்காக விமான நிலையத்தில் விஜய் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். சுமார்  14 ஆண்டுகளுக்கு பின்னர் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய், கேரளா வந்துள்ளதாக கேரள ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை நேரில் காணவும், வாழ்த்துக்களை தெரிவிக்கவும் காலையில் இருந்தே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.   மாலை  4  மணிக்கு  கேரளா வந்த விஜய்  அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.   அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டிருந்த காட்சி ஒரு  திடீர் ரோட் ஷோவாக மாறியது  . ரசிகர்கள் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டதால், அந்த கூட்டத்தில் கார்  மெதுவாக ஊர்ந்து சென்றது  . இதனால் திருவனந்தபுரமே ஸ்தம்பித்தது.  

விஜய்


இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  அந்த வகையில் நடிகர் விஜய் சென்ற கார், கூட்டத்தில் சிக்கி சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்டது.இது குறித்த  வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த காரின் கதவுகள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் நசுங்கியுள்ளன. அதேபோல் கார் கண்ணாடியும் சுக்குநூறாய் உடைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் நடிகர் விஜய் தன்னுடைய கேரள ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web