"தவெக சென்றவர்களுக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்டார்" - சேலத்தில் இபிஎஸ் விமர்சனம்!

 
எடப்பாடி இபிஎஸ்

தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கும் அதிமுகவிற்கும் இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவிற்குச் சென்றவர்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசுகையில், அதிமுகவிலிருந்து பெரிய அளவில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுத் தவெகவிற்குச் சென்றவர்களுக்கு, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இறுதியாகப் பெரிய "அல்வா" கொடுத்து ஏமாற்றிவிட்டார்.

எடப்பாடி

முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கு எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையோ அல்லது பணிகளையோ செய்யவில்லை. அவர் வெறும் 'பஞ்ச் டயலாக்' மட்டுமே பேசித் காலத்தைக் கடத்தி வருகிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை இறங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவெக அரசை விமர்சித்து வருகிறார். இதற்கு முன்னதாக, "சொந்தக் கட்சி பீஸ் பீஸாக உடைவதைத் தடுத்துக் காப்பாற்றுங்கள்" என்று தவெக தரப்பு இபிஎஸ்ஸிற்கு அறிவுரை வழங்கியிருந்த சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இபிஎஸ் தற்பொழுது இந்த "அல்வா" விமர்சனத்தை முன்வைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.