மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய்... தவெகவில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் ?
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதால் இப்போதிருந்தே அதற்கு தயாராகி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் 28 அணிகள் உருவாக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

திருநர் அணி என்ற திருநங்கைகளுக்காக ஒரு அணி உருவாக்கப்பட்ட நிலையில் பெரும் சர்ச்சையாக மாறியது.திருநர் அணி உருவாக்கப்பட்டது வரவேற்பை பெற்றாலும் அது 9வது இடத்தில் இடம் பெற்றது திருநங்கைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 15வது இடம்பெற்றுள்ள சிறுவர்கள் அணி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தேர்தல் ஆணையத்தின் விதிப்படி சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் சிறுவர்கள் அணி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த அணியின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் பலரும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
