மாஸ் வீடியோ... கார் கண்ணாடியை இறக்கி ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய்!

 
தளபதி 69

  தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய் தவெக என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி வெற்றிகரமாக முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதன் காரணமாக சினிமாத்துறையை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இந்த அறிக்கையை தொடர்ந்து  அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.   


இந்நிலையில்தான் இந்தப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல்  நடிக்க உள்ளனர்.இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்திற்காக ஷார்ட் கட் முடியோடும், கிரே தாடியோடு நடிகர் விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தளபதி 69

இந்நிலையில்   நடிகர் விஜய் தன்னுடைய மினி வேனில் செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. மினி வேனில் செல்லும் விஜய்யை பார்த்ததும்  அவரது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.  விஜய் உடனே கார் கண்ணாடியை கீழ் இறக்கி ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web