முதலில் பெண் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய விஜய்… தவெக கூட்டத்தில் நடந்தது என்ன?

 
தவெக

 

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான விஜய் பெண் சட்டமன்ற உறுப்பினர்களை முதலில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக

கூட்டத்தில் பங்கேற்ற பெண் எம்.எல்.ஏ.க்களிடம், கடந்த ஆறு மாதங்களாகத் தங்களது தொகுதிகளில் மேற்கொண்ட பணிகள், மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொகுதி நிலவரம் குறித்து விஜய் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தொடர்பாக அண்மையில் சர்ச்சைகளும் புகார்களும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு, பொதுமக்களுடனான அணுகுமுறை மற்றும் கட்சியின் ஒழுக்கம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் ஆறு மாத நிறைவையொட்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் கவனம் பெற்றுள்ளது. பெண் எம்.எல்.ஏ.க்களுடனான சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.