விஜய்க்கு கொடைக்கானலில் 2 எஸ்டேட்கள், சென்னையில் 10 சொகுசு வீடுகள் - வேட்புமனுவில் வெளியான சொத்து விபரங்கள்!

 
விஜய் கொடைக்கானல் விஜய் கொடைக்கானல்

அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது பிரமாணப் பத்திரத்தில் அசையா சொத்துக்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக மலைப்பிரதேசமான கொடைக்கானலில் அவருக்குச் சொந்தமான எஸ்டேட்கள் பற்றிய விபரம் கவனத்தைப் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் விஜய்க்கு இரண்டு பெரிய எஸ்டேட்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு நேரங்களைக் கழிக்கவும், இயற்கை சூழலில் தங்குவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த எஸ்டேட்கள், அவரது சொத்து மதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தவெக விஜய்

சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் விஜய்க்குச் சொந்தமாக வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 10 சொத்துக்கள் உள்ளன. தற்போது அவர் நீலாங்கரை வசித்து வரும் பிரம்மாண்ட பங்களா, அவர் ஆரம்பக் காலத்தில் சாலிகிராமம் பகுதியில் வசித்த வீடு, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் வணிக ரீதியான மற்றும் குடியிருப்புப் பகுதிகள். பள்ளிப்பட்டு, சோழிங்கநல்லூர்: வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் என கூறப்பட்டுள்ளது.  விஜய் தனக்கு ஒரு ரூபாய் கூட கடன் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய்

மனைவி சங்கீதா பெயரில் மட்டும் சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் (நிலம்/வீடுகள்) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் தனது திரையுலக வருமானத்தை முறையாகச் சொத்துக்களில் முதலீடு செய்திருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. ஒரு நேர்மையான வரி செலுத்துபவராக, தனது அனைத்துச் சொத்து விபரங்களையும் வெளிப்படையாக அறிவித்துள்ளதை அவரது ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.